கடலூர்

மலேரியா தடுப்பு விழிப்புணர்வு

தினமணி

வடலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாதம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு நிபுணர் மனோகரன், கொசு மற்றும் தண்ணீரால் பரவும் நோய்கள் குறித்து விளக்கிப் பேசினார். கடலூர் மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி, மலேரியா நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள், நோய் கட்டுப்பாட்டில் மாணவிகளின் பங்கு குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கனிமொழி பங்கேற்று, மலேரியா நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறை குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியை வட்டார ஆய்வாளர் பாண்டியராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் 350 மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் குமாரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT