கடலூர்

தற்கொலை தடுப்பு  தேசியக் கருத்தரங்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில், 'இளம் பிராயத்தினர் மன நலத்தை வலிமைப்படுத்துவது எவ்வாறு? அவர்களிடத்தில் காணப்படும் தற்கொலை எண்ணங்களை எவ்வாறு தடுப்பது?' என்ற தலைப்பில் நடைபெறும் அகில இந்திய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். நிதி உதவியுடன்  நடைபெறும் இந்த நிகழ்வில், இணைப் பேராசிரியரும்,  விழா ஒருங்கிணைப்பாளருமான எஸ்.குலசேகரப் பெருமாள்பிள்ளை வரவேற்றார். கல்வியியல் துறைத் தலைவர் ஆர்.பாபு தலைமை வகித்துப் பேசினார். பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினரும், மொழியியல் புல முதல்வருமான வி.திருவள்ளுவன் விழாவை தொடங்கி வைத்து தொகுப்பேட்டை வெளியிட்டுப் பேசினார். முதல் பிரதியை கல்வியியல் புல முதல்வர் ஆர்.ஞானதேவன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றினார்.
கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர்  எஸ்.கலைவாணி விளக்கிப் பேசினார். உதவிப் பேராசிரியர் கே.சாய்லீலா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT