முகப்பு
கடலூர்

மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருக்கழிப்பாலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம், மனுநீதி நாள் முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருக்கழிப்பாலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம், மனுநீதி நாள் முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. இதில், அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
 சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலை வகித்துப் பேசினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
 வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 அதேபோல, மாதந்தோறும் ஒவ்வோர் ஊராட்சிக்கும் அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.
 இந்த முகாமில் பெறப்பட்ட 936 மனுக்களில் 598 மனுக்கள் ஏற்கப்பட்டன. 22 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 316 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முகாமில் மொத்தம் 517 பயனாளிகளுக்கு ரூ. 58,42,445 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
 முகாமில் வேளாண் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
 கவரப்பட்டு ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பி.சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், துணை ஆட்சியர்கள் எஸ்.கணேஷ், வி.பி.ஜெகதீஸ்வரன், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவகர்லால் பாபு, மாவட்ட வழங்கல் அலுவர் தினேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலவர் ரதி, சிதம்பரம் வட்டாட்சியர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →