கடலூர்

பணி நீக்க நடவடிக்கைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்ப்பு: காவல் நிலையத்தில் புகார்

தினமணி

என்.எல்.சி.யில் பணிகளை மேற்கொண்டுவரும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர்.
 நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் புதிய அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
 இந்த நிறுவனத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தனியார் நிறுவனம், ஒப்பந்தத் தொழிலாளர்களை அடிக்கடி பணியிலிருந்து நீக்கி வருவதாகவும், அவர்களுக்கான ஊதியத்தையும் சரிவர வழங்கவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், திங்கள்கிழமை அந்த நிறுவனத்தினர் 5 ஓட்டுநர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டனராம்.
 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 50 பேர் செவ்வாய்க்கிழமை காலை தெர்மல் காவல் நிலையம் முன் கூடினர். தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டிப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
 மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இந்தப் பிரச்னை தொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசுவதாக தெரிவித்ததை அடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT