முகப்பு
கடலூர்

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரணம்

பண்ருட்டி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நிவாரண உதவியை வழங்கினார்.பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம் ஊராட்சி, சிறுதொண்டமாதேவி

Updated On : 15 மே, 2018 at 4:34 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பண்ருட்டி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நிவாரண உதவியை வழங்கினார்.
பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம் ஊராட்சி, சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவரது கூரை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், சம்பவ இடத்தை அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி அரசு வழங்கிய நிவாரண உதவிகளோடு, தனது சொந்த உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது, வருவாய் ஆய்வாளர் ராசலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ச.ஞானமணி, ஊராட்சி கழகச் செயலர்கள் தஷ்ணாமூர்த்தி, பன்னீர்செல்வம், நிர்வாகிகள் தில்லைக்கண்ணு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.