கடலூர்

தடுப்புக் காவலில் 2 பேர் கைது

DIN

வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவரை தடுப்புக் காவலில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, தாண்டவன்குப்பத்தில், வேல்முருகன் என்பவரது வீட்டின் முன் கடந்த ஏப்.9-ஆம் தேதி தூங்கிக்கொண்டிருந்த ரெளடி வெட்டு சசி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் ராஜா என்ற கட்டை ராஜேந்திரன் மற்றும் 6 பேர் மீது தெர்மல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கட்டை ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கட்டை ராஜேந்திரன் மீது தெர்மல் மற்றும் மந்தாரக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
விருத்தாசலம், சிறுவரப்பூர், ஏரிக்கரைச் சேர்ந்தவர் கண்மணிராஜா என்ற கண்மணி. இவர் தனது 3-ஆவது குழந்தையை கடந்த ஏப்.19-ஆம் தேதி கொலை செய்தார். இதுகுறித்து விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ராஜதாமரைப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து கண்மணிராஜாவை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தார். கண்மணிராஜா மீது காவல் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
மேற்கண்ட இருவரின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT