கடலூர்

வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீமணவாள மாமுனிகள் உத்ஸவம்

DIN

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீமணவாள மாமுனிகள் உத்ஸவம் நடபெற்று வருகிறது. 
இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமணவாள மாமுனிகள் உத்ஸவம் கடந்த அக்.2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெற்றன. மாலையில் வீதி உலா நடைபெற்றது. உத்ஸவத்தில் சனிக்கிழமை (நவ.10) காலை வேதபுஷ்கரளி எனும் பெரிய குளத்தில் தீர்த்தவாரியும், ஞாயிற்றுக்கிழமை காலை திருமஞ்சனம், பிரபந்த சாற்றுமுறையும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை கந்தபொடி உத்ஸவத்துடன் விழா முடிவுடைகிறது.  விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வா.மதனா, ஆய்வாளர் சீனுவாசன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி ஆகியோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT