கடலூர்

அதிமுக கொடியேற்று விழா

DIN

அதிமுக தொடங்கப்பட்டதன் 47 -ஆம் ஆண்டையொட்டி, திட்டக்குடி நகர அதிமுக சார்பில் கட்சிக் கொடியேற்று நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு கட்சியின் திட்டக்குடி நகரச் செயலர் ஆர்.நீதிமன்னன் தலைமை வகித்தார். மங்களூர் ஒன்றியச் செயலர் கே.பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கொடியேற்றினார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் கல்வெட்டைத் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, செல்வி ராமஜெயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரி (அரக்கோணம்), குமார் (திருச்சி), மா.சந்திரகாசி (சிதம்பரம்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம், குமரகுரு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ராமு, சிவசுப்ரமணியன், திட்டக்குடி ஜெயலலிதா பேரவைச் செயலர் செல்வராஜ், வீட்டு வசதி சங்கத் தலைவர் முல்லைநாதன், நல்லூர் தெற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலர் பொன்னேரி முத்து, கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT