கடலூர்

வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய 
ஜனநாயக மாதர் சங்கத்தினர் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் கே.சேகர் தலைமை வகித்தார். பாபு, பார்த்திபன், அன்பழகன், சேகர், அஞ்சு, ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவகாமி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலர் சுரேஷ், ராஜேஷ், வீரமணி, தண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.செவிலியர்களை அதிகப்படுத்த வேண்டும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்ற நவீன கருவிகளை ஏற்படுத்திட வேண்டும். நோயாளிகளுக்கு சுகாதாரமான குடிநீர், உணவு வழங்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கறிப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT