கடலூர்

புயல் நிவாரண மருத்துவ முகாம்

DIN

கஜா புயலைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடற்கரையோர ஊராட்சிகளில் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தின் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. குறிப்பாக, கடலோர கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. 
இந்த நிலையில் புயல், மழையால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடற்கரையோர ஊராட்சிகளான சிறுபாளையூர், தியாகவல்லி, காயல்பட்டு, ஆதிநாராயணபுரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், திருச்சபுரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் புயல் நிவாரண மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த கிராம மக்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT