கடலூர்

வீடுகளில் உருவாகும் குப்பையை குறைக்க வேண்டும்'

DIN


வீடுகளில் உருவாகும் குப்பைகளின் அளவைக் குறைக்க வேண்டுமென விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கேட்டுக்கொண்டார்.
புதுவையில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும், விருத்தாசலம் நகராட்சியும் இணைந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் மற்றும் மாணவிகளுக்கான தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின. பள்ளி தலைமையாசிரியை இரா.சுகந்தி தலைமை வகித்தார். நகராட்சிப் பொறியாளர் பி.பாண்டு, நகராட்சி சுகாதார அலுவலர் பெ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள்-தொடர்பு
கள அலுவலக உதவி இயக்குநர் தி.சிவக்குமார் நோக்கவுரை ஆற்றினார். கடலூர் துணை ஆட்சியர் சா.வைத்தியநாதன் பங்கேற்று, தமிழக அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் பொருள் மீதான தடை விதிகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமா தூய்மையின் முக்கியத்துவம் குறித்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார்.
விவாதம், விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: குப்பையின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அதை அகற்றி அப்புறப்படுத்துவதற்கான ஊழியர்களும் அதிகளவில் தேவைப்படுகின்றனர்.
இன்றைய வாழ்க்கை முறை நம் வீடுகளில் குப்பையின் அளவை அதிகரிப்பதாக உள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் வீடுகளில் குப்பை அளவு அதிகரிக்கிறது. எனவே, மறுபயன்பாடு- மறுசுழற்சி என்பதை மாணவிகள் பழக்கப்படுத்திக் கொண்டால் தூய்மை என்பது அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிடும் என்றார் அவர்.
தொடர்ந்து, அனைத்து மாணவிகளும் தூய்மை இந்தியா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மக்கள்-தொடர்பு கள உதவியாளர் மு.தியாகராஜன் வரவேற்க, நகராட்சியின் தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் கா.மணிமாறன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT