கடலூர்

முதியோர் இல்லத்துக்கு உதவி

DIN

தான உற்சவ வாரத்தை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், மாரியப்பா நகர் "அன்பகம்' முதியோர் காப்பகத்தில் வசிப்போருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (படம்) அண்மையில் நடைபெற்றது.
 நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தலைமை வகித்தார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஐயப்பராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், திட்ட அலுவலர்கள் அளித்த சமையல் பொருள்கள், போர்வைகள் ஆகியவை காப்பகத்துக்கு வழங்கப்பட்டன. 
 ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் கே.தமிழ்மாறன், டி.தமிழ்ச்செல்வன், எம்.சீனிவாசன், ஜி.ராஜராஜன், ஹெச்.மணிகண்டன், எம்.ராஜேஸ்வரி, பர்வீஸ், கே.தமிழ்ச்செல்வன், ஏ.அன்புமலர், எஸ்.பாரதி, எஸ்.கார்த்திகேயன், என்.காயத்ரி, பி.சிவகுருநாதன், கே.பிரகாஷ், பி.பாலமுருகன், எஸ்.பாலு, எஸ்.தனபாண்டியன், பி.சிவப்பிரகாஷ், பி.சிவராஜ், டி.தாமரைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். காப்பக நிர்வாகி சுகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT