கடலூர்

குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கடலூரில் குடிநீர் பிரச்னையை கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூர் நகராட்சி, திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள போடிசெட்டித்தெருவில் கடந்த 15 நாள்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதைக் கண்டித்து அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் குடிநீர் குழாய் அருகே திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள், திருப்பாதிரிபுலியூர்  போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அந்தப் பகுதியினருக்கு டிராக்டர் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
 இதுகுறித்து நகராட்சி தரப்பில் கூறுகையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்கலாக வந்தது. இதையடுத்து, குடிநீர் குழாய்களை புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியானது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவடையாததால் குடிநீர் வழங்க முடியவில்லை. எனினும், மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT