கடலூர்

பல்கலை.யில் சர்வதேச பயிலரங்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் வீடு, தொழில்சாலைகளுக்கான கம்பியில்லா உணர் வலையமைப்பு பற்றிய சர்வதேச பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொறியியல் புலத்தில் உள்ள மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற பயிலரங்கத்தின் தொடக்க விழா ஆம்டெக் அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கோ.யமுனா வரவேற்றார். 
பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக, தாய்லாந்து பாங்ஹாங் கிங் மாங்குட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் விதாவத் சிட்டகுள் பங்கேற்று உரையாற்றி
னார். 
திருநெல்வேலி மகேந்திரகிரி மூத்த அறிவியல் ஆய்வாளர் ஏ.பென்ஷிகர் ராஜன் வாழ்த்துரையாற்றினார். பொறியியல் புல முதல்வர் அந்தோனி ஜெயசேகர் தலைமை வகித்துப் பேசினார். உதவிப் பேராசிரியர் இ.ஞானமானோகரன் நன்றி கூறினார். பயிலரங்கில் 250 மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT