கடலூர்

பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னணு, தகவல் தொடர்புகளில் புதுமையான தொழில்நுட்பம் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்க தொடக்க விழா பொறியியல் புல ஆம்டெக் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் கோ.யமுனா வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர்  வி.முருகேசன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினார். மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழக மின்பொறியியல் புல பேராசிரியர் ஷாருல் கமால் பின் அப்துல் ரஹிம், புனே மைய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலைய ஹைட்ராலிக் சாதனப் பிரிவு பேராசிரியர் செல்வபாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
பொறியியல் புல முதல்வர் சி.அந்தோனி ஜெய்சேகர் தலைமை வகித்துப் பேசினார். உதவிப் பேராசிரியர் பி.டி.சத்யா நன்றி கூறினார். இந்தக் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து  கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT