பெண் மர்மச் சாவு: கோட்டாட்சியர் விசாரணை
பெண் மர்மச் சாவு தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் மர்மச் சாவு தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.சுரேஷ். இவருக்கும், அருகிலுள்ள பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் கற்பகவள்ளி (22) என்பவருக்கும் 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் கற்பகவள்ளி சடலமாகக் கிடந்தார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து, கற்பகவள்ளியின் தாய் ஜோதி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திராவும் விசாரணை நடத்தி வருகிறார்.