கடலூர்

பல்கலை.யில்  சுகாதாரம் குறித்த பயிலரங்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பில், தொலைதூரக் கல்வி மையத்தில், சுகாதாரம் தொடர்பான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
அந்தச் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர்  ச.ஐயப்பராஜா வரவேற்றார். கல்வியியல் புல முதல்வர் ஆர்.ஞானதேவன் தலைமை வகித்து, பயிலரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். 
தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எம்.அருள் முன்னிலை வகித்தார். ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி முதல்வர் டி.கரோலின் கருணாகரி பேசினார். உளவியல் துறைத் தலைவர் ஆர்.சங்கர் வாழ்த்திப் பேசினார்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வி.முனியப்பன் கலந்து கொண்டு, சுகாதார மேம்பாடு குறித்து விளக்கினார்.
இளஞ்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ஆர்.கலை நன்றி கூறினார். 
பயிலரங்க ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் கே.ரேணுகா, பி.சசிரேகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பயிலரங்கில் உளவியல் துறைப் பேராசிரியர்கள் நீலகண்டன், அருள்மொழி உள்ளிட்ட பேராசிரியர்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT