கடலூர்

மலேரியா தின விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

பண்ருட்டியை அடுத்துள்ள மேல்கவரப்பட்டு கிராமத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது.
மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சீஷா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இந்த ஊர்வலத்தை மேல்பட்டாம்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் வசந்த் தொடக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ஷங்கரி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் சீஷா தன்னார்வ பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். சுகாதார மேற்பார்வையாளர் ஷாஜகான், மருத்துவம் சாரா அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், சீஷா உதவி மேலாளர் சார்லஸ் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT