கடலூர்

ஏ.டி.எம். மையத்தில் தவறவிட்ட  ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

DIN

ஏடிஎம் மையத்தில் கண்டெடுத்த ரூ.10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரை போலீஸார் பாராட்டினர்.
கடலூர் கூத்தப்பாக்கம் சண்முகம் நகரைச் சேர்ந்தவர் 
ஏ.கென்னடி கிறிஸ்துவதாஸ் (52). தோல் பொருள்கள் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு செம்மண்டலத்திலுள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, இயந்திரத்தில் பணம் வெளியே வந்த நிலையில் இருந்ததை எடுத்த எண்ணிப்பார்த்த போது அதில் ரூ.10 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அந்தப் பணத்தை ஒப்படைத்ததோடு, குறிப்பிட்ட வங்கிக்கும் தகவல் அளித்தார்.  போலீஸார் நடத்திய விசாரணையில், பணத்தை தவறவிட்டவர் கடலூ முதுநகர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து,  காவல் 
ஆய்வாளர் கி.உதயகுமார் வெள்ளிக்கிழமை கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு ஹரிஹரசுதனை வரவழைத்து, அவர் விட்டுச் சென்ற ரூ.10 ஆயிரத்தை கென்னடிகிறிஸ்துவதாஸ் 
மூலம் வழங்கச் செய்து, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT