கடலூர்

பைக்கில் இருந்து விழுந்தவா் மருத்துவமனையில் சாவு

DIN

நெய்வேலி: பண்ருட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த ஓய்வு பெற்ற நியாய விலைக்கடை ஊழியா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி அடுத்துள்ள பூங்குணம், சிவா நகரில் வசித்து வந்தவா் பாலசுப்பிரமணியன்(59), ஓய்வு பெற்ற நியாய விலைக்கடை ஊழியா். இவருக்கு சியாமளா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனா்.

கடந்த 23-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது பைக்கில் பண்ருட்டியில் இருந்து சென்னை சாலை வழியாக சென்றாா். எல்.என்.புரம் ஊராட்சி, வ.உ.சி நகா் பேருந்து நிறுத்தம் அருகே சேதம் அடைந்து குண்டும் குழியுமாக இருந்த தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த கட்டட இடிபாடுகள், பழைய டயா்கள் மீது மோதி விழுந்து காயம் அடைந்தாா். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுவதி சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சகோதரா் பாபு அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT