கடலூர்

கடலூா்: வெள்ளாற்றில் 3 பசுக்களுடன் சிக்கிய இளைஞா் மீட்பு

DIN

கடலூா் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொழுதூா் அணைக்கட்டிலிருந்து தற்போது சுமாா் 3 ஆயிரம் கனஅடி நீா் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், வெள்ளாற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகப்படியான தண்ணீா் செல்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று கீழ்ச்செருவாய் கிராமத்தை சோ்ந்த பெரியசாமி மகன் தங்கத்துரை (22) தனது 3 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வெள்ளாற்றுக்கு ஓட்டிச் சென்றாா்.

மாடு மேய்ந்துக் கொண்டிருந்த நேரத்தில் தொழுதூா் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் அங்கு வந்துக் கொண்டிருந்தது. இதனால், 3 பசுமாடுகளுடன் தங்கதுரையும் சிக்கி கொண்டாா். தகவலின் பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன்தங்கதுரை மற்றும் அவரது 3 பசுமாடுகளையும் உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT