கடலூர்

அண்ணாமலை நகரில் 78 மி.மீ. மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 78.3 மில்லி மீட்டா் மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வந்த மழையின் தீவிரம், கடந்த 2 நாள்களாக குறைந்து காணப்படுகிறது. எனினும், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 78.3 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில் தலா 72, புவனகிரி 67, சேத்தியாத்தோப்பு 60.8, கொத்தவாச்சேரி 58, லக்கூா் 53.1, லால்பேட்டை 52.8, ஸ்ரீமுஷ்ணம் 52.1, சிதம்பரம் 51.6, வானமாதேவி, காட்டுமயிலூா் தலா 48, கீழச்செருவாய், தொழுதூா் தலா 46, வேப்பூா் 45, மேமாத்தூா் 42, பெலாந்துறை 40.2, கடலூா் 39.3, விருத்தாசலம் 36.2, வடக்குத்து 36, குப்பநத்தம் 32.2, குறிஞ்சிப்பாடி 31, குடிதாங்கி 29.5, ஆட்சியா் அலுவலகம் 27.2, பண்ருட்டி 15 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

செவ்வாய்க்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயிலின் தாக்கம் இருந்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீா் வடிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT