கடலூர்

அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

DIN

எல்லப்பன்பேட்டையில் உள்ள அரசு ப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம், எல்லப்பன்பேட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, அலமாரி, தலைவர்களின் உருவப் படம், சுவர் கடிகாரம், குடங்கள் உள்பட சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை  கிராம மக்கள் கல்வி சீர்வரிசையாக வழங்க, வட்டார கல்வி அலுவலர்கள் சவுரிமுத்து, மன்னர் மன்னன், செல்வி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
 பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்திலகம், கிராம கல்விக் குழுத் தலைவர் மணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஷகிலாமேரி, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரக் கல்வி மேற்பார்வையாளர் கிருஷ்ணா, புஷ்பசவுரிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பள்ளி விரிவாக்கத்துக்ôக கிராம கல்விக்குழு சார்பில் 60 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராயப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT