கடலூர்

உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

DIN

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலர் டி.புருஷோத்தமன், நிர்வாகிகள் ஆதவன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மௌன அஞ்சலி: கடலூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் நேரு பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு, சுதந்திரப் போராட்ட தியாகிகளும், அவர்களது வாரிசுகளும் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர். சங்கத்தின் பொதுச் செயலர் விஜயலட்சுமி, தியாகிகள் ஏகாம்பரம், காரையூசுப், துணைத் தலைவர் சாந்திவரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT