முகப்பு
கடலூர்

தமிழக ரயில் நிலையங்களில் என்எல்சி சார்பில் நவீன கழிப்பறை: மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் 200 ரயில் நிலையங்களில் என்எல்சி சார்பில் நவீன கழிப்பறைகள் கட்டும் திட்டத்துக்கு ரயில்வே துறை அமைச்சர்

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:46 am IST
பகிர்:

தமிழகத்தில் 200 ரயில் நிலையங்களில் என்எல்சி சார்பில் நவீன கழிப்பறைகள் கட்டும் திட்டத்துக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 200 ரயில் நிலையங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 ரயில் நிலையங்களில்  நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. 
இந்தப் பணிகளை  என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
 இதில் ஆண்கள், பெண்களுக்கு தலா 3 கழிப்பறைகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு கழிப்பறையும் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஆண்கள் கழிப்பறையில் தானியங்கி முறையில் ஆணுறைகள் வழங்கும் இயந்திரமும், பெண்கள் கழிப்பறையில் தானியங்கி முறையில் நாப்கின் வழங்கும் இயந்திரமும், நாப்கினை மின்சாரம் மூலம் எரிக்கும் இயந்திரமும் அமைக்கப்பட உள்ளன.
 இந்தத் திட்டத்துக்கானஅடிக்கல் நாட்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவில், ரயில்வே மற்றும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.  
நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.