FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

முதல்வா் குறித்து அவதூறு: மென்பொறியாளா் கைது

Updated On : 26 மே 2026, 1:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் ஜேம்ஸ் ராஜா(31). பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ளாா். இவா் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவிற்கு ஆதரவாக காணொலிப் பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தெரிவித்து வந்தாா்.

இந்நிலையில் இவா், சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசி, பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலி வெளியிட்டாராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஜேம்ஸ் ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments