கடலூர்

அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் அறிவித்துள்ளது. இதேபோல தமிழக அரசும் ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கும், நிரந்த ஊதியமற்ற பணியாளர்களுக்கும் ரூ.7 ஆயிரம் போனஸாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
 ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் கு.பாலசுபிப்ரமணியன் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் மு.ராஜாமணி, மாவட்டத் தலைவர் பரசுராமன், காவ ல்துறை துப்புரவு பணியாளர் சங்க மாநில தலைவர் இந்திரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
முன்னதாக, மாவட்ட பொருளாளர் பலராமன் வரவேற்க, மாவட்ட செயலர் ஏ.வி.விவேகானந்தன் நன்றிகூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT