கடலூர்

கரும்பு நிலுவைத் தொகை கோரி காத்திருப்புப் போராட்டம்

DIN

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி விருத்தாசலத்தில் விவசாயிகள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் அருகே உள்ள ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் விருத்தாசலம் பாலக்கரையில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. அப்போது, விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பட்டை நாமமிட்டு போராட்டத்தில்  பங்கேற்றனர்.
 2016 -17, 2017- 18-ஆம் ஆண்டுகளுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகை வழங்காத ஆலை நிர்வாகத்திடமிருந்து கரும்பு பணத்தை அரசு பெற்றுத் தர வேண்டும். பாக்கித் தொகையை கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின்படி 15 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும். மொத்தம் ரூ.93.46 கோடியை உடனடியாக வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர். 
பொங்கல் பண்டிகைக்குள் கரும்பு பணத்தை வழங்கவும், மற்ற நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வரையிலும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT