கடலூர்

பறிமுதல் வாகனங்கள் ரூ.9.88 லட்சத்துக்கு ஏலம்

DIN

கடலூர் மாவட்டத்தில் மதுக் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.9.88 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன. 
 கடலூர் மாவட்டத்தில் மது கடத்தல் தொடர்பாக  பறிமுதல் செய்யப்பட்ட 106 வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு சொத்தாக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் 89 வாகனங்கள் ஏலம் போயின. 
இதில், இரு சக்கர வாகனங்கள்-78 , மூன்று சக்கர வாகனங்கள்-9, நான்கு சக்கர வாகனங்கள்-2 ஆகியவை ஏலம் போயின. இதன் மூலமாக ரூ.9.88 லட்சம் அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
கலால் உதவி ஆணையர் வெங்கடேசன், அரசு தானியங்கி பணிமனை செயற்பொறியாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT