கடலூர்

நெல்லிக்குப்பம் அருகே இரு தரப்பு மோதலில் இளைஞர் கொலை

DIN

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வியாழக்கிழமை இரவு இரு தரப்பினர் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இளைஞர் கொல்லப்பட்டார்.
 நெல்லிக்குப்பம் அருகே உள்ள  கீழ்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுபாஷ் (35), தாமோதரன் (50). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில், காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை இரவு இவர்களது ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
 இந்தத் தாக்குதலில் இரு தரப்பைச் சேர்ந்த தங்கவேல் (37), முத்துராமன் (45), சுபாஷினி (10), மணிகண்டன் (25) உள்ளிட்டோர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
ஆனால், தாமோதரன் தரப்பைச் சேர்ந்த தங்கவேல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  மணிகண்டன் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 இந்தச் சம்பவத்தை அடுத்து, இரு தரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டனர். இதில், வெங்கடபதி, பக்கிரிசாமி, ராமலிங்கம் உள்ளிட்டோரின் வீடுகள், அதிலிருந்த பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவை சேதமடைந்தன. 
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 தங்கவேல் கொலை தொடர்பாக அவரது உறவினர் ஞானவேல் அளித்த புகாரின்பேரில் 16 பேர் மீதும், வீடுகளைச் சேதப்படுத்தியதாக வெங்கடபதி, பக்கிரிசாமி ஆகியோர் தனித் தனியாக அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீதும் நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுபாஷ், சத்தியமூர்த்தி, சுதாகர் ஆகியோரைக் கைது செய்தனர். 
தலைமறைவான மற்றவர்களைத் தேடி வருகின்றனர். முன்னதாக, தங்கவேலின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT