கடலூர்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்

DIN

தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் அதன் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 
சங்கத்தின் பொதுச் செயலர் பாபுசுப்ரமணியன் சென்ற கூட்ட நடவடிக்கையையும், பொருளாளர் இர.திருநாவுக்கரசு வரவு-செலவு அறிக்கையும், மாநில துணைத் தலைவர் ஆர்.ஜேக்கப் ஓய்வூதியர் இதழுக்கான வரவு-செலவுகளையும் படித்
தனர். 
கூட்டத்தில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவிப்பது, 8-ஆவது ஊதியக்குழு அறிக்கையின் அடிப்படையில் ஊதியத்தில் உள்ள குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் கமிட்டி அறிக்கை கடந்த 5-ஆம் தேதியன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு அதனை பரிசீலித்து விரைவில் ஓய்வூதியர்களுக்கு சாதகமான அரசாணை வெளியிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு வெளியிட்ட அரசாணையை கடலூர் மாவட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் ரா.சஞ்சீவிராயர், ஆ.செயராமன், அ.பேட்ரிக், எஸ்.காந்திமதி, எஸ்.ருக்மணி, பி.செல்லமுத்து, என்.பூவராகமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக துணைத் தலைவர் பி.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT