கடலூர்

ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் முத்து.சுப்பிரமணியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 
 மாவட்ட துணைத் தலைவர் ஆர்.நாகராஜன் முன்னிலை வகித்தார். சென்ற ஆண்டு சங்க நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலர் ஜி.ராஜேந்திரனும், வரவு-செலவு கணக்கு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஏ.அப்துல்பரகத்தும் வாசித்தனர். 
 கூட்டத்தில், 7-ஆவது ஊதியக் குழுவில் விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஏப்.10-ஆம் தேதியை தேசிய நில அளவை தினமாக கொண்டாட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து ஓய்வூபெற்றவர்களுக்கு 50 சதவீத ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதை மாற்றி முழு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.ரத்தினவடிவேலு, கே.ஜெயராமன், ஜெ.விஸ்வநாதன், ஏ.பாலன், வை.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT