கடலூர்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மறியல்: 1,460 பேர் கைது

DIN

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடலூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 1,460 பேர் கைது செய்யப்பட்டனர்.
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
 பணிக்குச் செல்லாத ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடலூர் மாவட்ட பழைய ஆட்சியரம் முன் குவிந்தனர். இவர்களது போராட்டம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு, பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு அறிவித்திருப்பது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணிக்கு வராத ஆசிரியர் பணியிடங்களில் பயிற்சி ஆசிரியர்களை நியமித்தல் ஆகிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், போராட்டத்துக்கு ஆதரவு இருக்குமா என்ற வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 ஆனால், வழக்கமான அளவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் திரண்டனர். பின்னர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
 போலீஸாரின் கைது நடவடிக்கையை அடுத்து, போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் கைதாகாமல் நழுவிச் சென்றனர். இதனால், சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற போராட்டத்தில் 1,460 பேர் மட்டுமே கைதாகினர்.
 இவர்களில், பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள் 600 பேர்களாவர். போராட்டத்தின் தொடக்க நாள்களில் 2 ஆயிரம் முதல் 2,500 பேர் வரை கைதான நிலையில், திங்கள்கிழமை கைது எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 70 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT