கடலூர்

குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் மறியல்

DIN


குடிநீர் பிரச்னையை கண்டித்து, சேவூரில் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 நல்லூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சேவூர் கிராமத்தில் சுமார், 1200 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தினருக்கு 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுதொடர்பாக, கிராம மக்கள் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
 இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமை விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் சேவூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலர் பிரகாஷ், வட்ட துணைத் தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்கு
வரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT