கடலூர்

இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கம்

DIN

பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கம் பண்ருட்டி திருவள்ளூர் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 ஒருங்கிணைப்பாளர் செல்வகுமாரவேல் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். இயற்கை தேனீ பண்ணை உற்பத்தியாளர் சின்ன பகண்டை ஞா.செல்வகுமார் தேனீ வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார். மேலும், இயற்கை வேளாண்மை குறித்து கருத்துரை வழங்கினார்.
 பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.ராசா வரவேற்றார். ஆட்சி மன்றக் குழுத் தலைவர் ரா.சஞ்சீவிராயர் தொடக்க உரை ஆற்றினார். இளைஞர் மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு இயக்குநர் மு.ச.நபில் புகாரி நோக்கவுரை நிகழ்த்தினார். சங்கச் செயலர் ரத்தின.ஆறுமுகம், பொருளாளர் பெரு.அய்யனார், துணைத் தலைவர் அரி.ஆனந்த் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சங்கத் தலைவர் க.கதிரவன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர்கள் ரா.ஆறுமுகம், வீ.சுப்புராயுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT