கடலூர்

பண்ருட்டியில் 29 மி.மீ மழை

DIN

கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 29 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
 கோடைக்காலத்தின் உச்சமான அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த நிலையிலும் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவான நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 106.52 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் கடலூர், பண்ருட்டி பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால், வெப்பம் சற்று தணிந்தது. மற்ற பகுதிகளிலும் மிதமான அளவில் மழை பெய்தது. எனினும், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வெயிலின் தாக்கம் இருந்தது.
 மின் தடையால் மக்கள் தவிப்பு: முன்னதாக, மழை பெய்தபோது பல்வேறு பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபட்டது. நகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமும், மற்ற பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் வரையிலும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர்.
 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 29 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: வானமாதேவி 26, கடலூர் 18.80, மாவட்ட ஆட்சியரகம் 15.60, குடிதாங்கி 10, தொழுதூர் 9, விருத்தாசலம் 7.20, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், கீழச்செருவாய், மேமாத்தூர் தலா 3, வேப்பூர் 2, அண்ணாமலை நகர் 1.60, பெலாந்துறை, குப்பநத்தம் தலா 1 மி.மீ வீதம் மழை பதிவானது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT