கடலூர்

பல்கலை.யில் கருத்தரங்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் "தொழில்சாலை மாசுக் கட்டுப்பாடு தொழில்நுட்பம் - 2019' என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
மத்திய அரசின் அறிவியல் - பொறியியல் குழுமத்தின் உதவியுடன் நடைபெற்ற கருத்தரங்க தொடக்க விழாவில், வேதிப் பொறியியல் துறைத் தலைவர் சி.கார்த்திகேயன் வரவேற்றார். பொறியியல் புல முதல்வர் கிருஷ்ணமோகன் தலைமை உரையாற்றினார்.
சென்னை ஏற்றுமதி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனப் பொது மேலாளர் காசி விஸ்வநாதன் கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினார். கருத்தரங்க நிகழ்வுக் குறிப்பை ஒருங்கிணைப்பாளர் பி.சிவப்பிரகாஷ் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 27 கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து வந்த 220 ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்று 131 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதித்தனர். 
இந்த ஆய்வுக் கட்டுரைகள் மத்திய மனிதவள வளர்ச்சி அமைச்சகத்தின் அங்கமான ராஜாராம் மோகன்ராய் தேசிய முகவத்தின் பதிவுடன் நூலாக வெளியிடப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT