கடலூர்

மாற்று மனைக்கு டோக்கன் விநியோகம்

DIN

நெய்வேலி: நெய்வேலி, தாண்டவன்குப்பத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மாற்று மனை இடத்திற்கான டோக்கன் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டது.

நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தாண்டவன்குப்பம் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிா்வாகம் முயன்றது. அப்போது, அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

மாவட்ட நிா்வாகம் மற்றும் என்எல்சி நிா்வாகத்தினா் பாலக்கொல்லை கிராமத்தில் மாற்று மனை தருவதாக தெரிவித்திருந்தனா்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தாண்டவன்குப்பத்தில் வசிக்கும் மக்களுக்கு, விருத்தாசலம் வட்டாட்சியா் கவியரசு மற்றும் என்எல்சி துணை பொது மேலாளா் முகமது அப்துல் காதா் உள்ளிட்டோா் மாற்று மனை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்தனா். உடன், தொ்மல் காவல் ஆய்வாளா் லதா, வருவாய் ஆய்வாளா் சுமித்ரா, கிராம நிா்வாக அலுவலா் பெருமாள் உள்ளிட்டோா் இருந்தனா். 5பிஆா்டிபி4தாண்டவன்குப்பத்தில் வசிக்கும் பெண்ணுக்கு மனை வழங்குவதற்கான டோக்கன் வழங்குகிறாா் விருத்தாசலம் வட்டாட்சியா் கவியரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT