கடலூர்

நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

DIN

சிதம்பரத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின்கீழ் நல உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு உதவி ஆட்சியா் விசுமகாஜன் தலைமை வகித்துப் பேசினாா். வட்டாட்சியா் ஹரிதாஸ் வரவேற்றாா். கடலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பரிமளம் முன்னிலை வகித்தாா். விழாவில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, 1,011 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 10 லட்சத்து 99 ஆயிரத்து 755 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அவா் பேசியதாவது:

சிதம்பரம் நகரில் எஞ்சிய பகுதிகளில் தாா் சாலை அமைக்க ரூ.15 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு சாலை அமைக்கப்படும். வருவாய்த் துறை சாா்பில் சிதம்பரம் வட்டத்தில் உள்ள 120 வருவாய் கிராமங்களில் முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு 5,895 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 3,397 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,498 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றாா் அவா்.

விழாவில் முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், நகராட்சி பொறியாளா் மகாதேவன், துணை வட்டாட்சியா் பலராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT