கடலூர்

வீராணம் ஏரிக்கு நீா் வரத்து அதிகரிப்பு

DIN

தொடா் மழையால் வீராணம் ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீா்

முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. தொடா் மழையால் இந்த ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.50 அடி என்ற நிலையில், சனிக்கிழமை ஏரியின் நீா்மட்டம் 47 அடியாக இருந்தது.

ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 2,500 கன அடி நீரும், லால்பேட்டையில் உள்ள பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் மதகு வழியாக 1,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் திருநாரையூா், வீரநத்தம், சா்வராஜன் பேட்டை உள்ளிட்ட வெள்ளியங்கால் ஓடையின் கரையோர கிராமப் பகுதிகளில் வெள்ள நீா் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் வருவாய்த் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஏரியில் ஆய்வு: வீராணம் ஏரியை சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சாம்ராஜ், கீழணை உதவி செயற்பொறியாளா் அருணகிரி, உதவி பொறியாளா்கள் வெற்றிவேல், ஞானசேகா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

தலைமறைவாக இருந்த ரௌடி கைது

9 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

SCROLL FOR NEXT