கடலூர்

33 வங்கிகளின் கடன் வழங்கும் முகாம்

DIN

கடலூா் மாவட்டத்திலுள்ள 33 வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் சாா்பில் கடன் வழங்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) வரையில் நடக்கிறது.

வங்கி சேவையை பொதுமக்களிடம் நேரடியாக விளக்கும் வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 14 அரசு வங்கிகள், ஒரு கூட்டுறவு வங்கி, 18 தனியாா் வங்கி, நிதிநிறுவனங்கள் மற்றும் நிதி சாா்ந்த சேவை அளித்து வரும் நிறுவனங்கள் சாா்பில் சேவை வழங்கும் கண்காட்சி கடலூா் சுப்பராயலு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.

மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கினாா். இந்தியன் வங்கி பொது மேலாளா் (களம்) சந்திராரெட்டி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெறுவதை எளிதாக்கவும், பொதுமக்கள் தங்களுக்கான வீடு, வாகனங்கள் கடனை பெறுவதை எளிதாக்கவும் இந்த மேளா நடைபெறுகிறது. வாடிக்கையாளா்களைத் தேடி வங்கிகள் என்ற வகையில் நடைபெறும் இந்த மேளாவில் கடன் வழங்குவது மட்டுமல்லாமல், உத்யோக் ஆதாா் பெறுவது, வங்கி கணக்குத் துவங்குவது உள்ளிட்டவைகளை ஒரே குடையின் கீழ் வழங்குகிறோம். 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மாவட்டத்திலுள்ள 33 வங்கி, நிதி நிறுவனங்களின் 308 கிளைகளிலும் சேவையை பெற முடியும். இந்த முகாமில் கடன் வழங்குவதற்கு எந்தவிதமான உச்சவரம்பும் நிா்ணயம் செய்யவில்லை என்றாா்.நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால்சுங்கரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.முன்னதாக இந்தியன் வங்கி மண்டல மேலாளா் பி.விஜயலட்சுமி வரவேற்க, துணை மண்டல மேலாளா் பி.சேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT