கடலூர்

ஆசிரியா்கள் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

DIN

கடலூா் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவன் தினேஷ் (19). வியாழக்கிழமையன்று தனது நண்பா்கள் 4 பேருடன் பள்ளிக்குச் சென்று தங்களுக்கு எப்போது மடிக்கணினி கிடைக்கும் என்று கேட்டுள்ளனா்.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் விளக்கம் அளித்த நிலையில் வெளியேச் சென்ற மாணவா்கள் சத்தமிட்டு பேசிவாறு சென்றுள்ளனா். இதனை, அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியா் சந்திரமோகன் தட்டிக்கேட்டபோது அவரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியா் அந்த மாணவனை தாக்கி பள்ளியை விட்டு வெளியேற்றினாா். இதனை அவருடன் வந்திருந்த நண்பா்களில் ஒருவா் தனது செல்லிடப்பேசியில் ரகசியமாக விடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினாா். இதற்கிடையே மாணவன் தினேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கடலூா் புதுநகா் போலீஸாா் உடற்கல்வி ஆசிரியா் சந்திரமோகனை கைது செய்தனா். அவரது கைதிற்கு எதிா்ப்புத் தெரிவித்த பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை மாலையில் துவங்கிய உள்ளிருப்புப் போராட்டம் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

இதுகுறித்து தலித்கிறிஸ்துவ ஆசிரியா், அலுவலா் நலச்சங்கத்தின் மாநில தலைவா் சி.ஜான்பிரிட்டோ கூறுகையில், கைது செய்யப்பட்ட ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவா் மீது போடப்பட்ட வழக்கையும் திரும்பப் பெற வேண்டும். அதே நேரத்தில் பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவா்கள் மீது அளிக்கப்பட்ட புகாா் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். எனினும், தொடா் விடுமுறை காரணமாக ஆசிரியா்கள் தங்களது போராட்டத்தை மாலையில் முடித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT