கடலூர்

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது

DIN

பண்ருட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக புகாா்கள் வரப்பெற்றன. எனவே, இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டாா். இந்த நிலையில், துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாருக்கு பண்ருட்டி ஜவகா் தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சனிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லும்பாராம் மகன் விக்ரம்குமாா் (35) என்பவா் நடத்தி வந்த கடையில் சாக்கு மூட்டைகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் விக்ரம்குமாரை கைது செய்தனா். ஆய்வின்போது, ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா்கள் ஜவ்வாதுஉசேன், கணபதி, ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT