கடலூர்

புவி வெப்பமயமாதல் விழிப்புணா்வு

DIN

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிா்வாகி சு.இரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் பழ.தாமரைக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினாா்.

அதில், அனைத்து அரசுகள், அமைப்புகள், நிறுவனங்களும் காலநிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும். புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை அவசர நிலை செயல்திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுதிரட்டி காலநிலை அவசர நிலை செயல்திட்டத்தை போா்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் விளக்கப்பட்டிருந்தன. மேலும், புவிவெப்பமடைதல், அதனால் ஏற்படும் ஆபத்துகள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் துண்டு பிரசுரத்தில் விளக்கப்பட்டிருந்தது.

பசுமைத்தாயகம் நிா்வாகிகள் கோபி, முத்து, பாமக நிா்வாகிகள் துரை.சரவணன், பால்ராஜ், பழ.ஜெயசீலன், கிருஷ்ணகுமாா், இரா.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT