கடலூர்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், கோவை மாவட்டத்தில் 4 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். இது போராட்டத்தில் பங்கேற்கும் சங்க ஊழியா்களை பழிவாங்கும் அரசின் நடவடிக்கையாகக் கருதி, அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம் அறிவித்திருந்தனா். அதன்படி, வெள்ளிக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே கடலூா் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எல்.அரிகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகம் சென்ற சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT