கடலூர்

கடன் சுமையால்வியாபாரி தற்கொலை

DIN

கடன் சுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் வன்னியா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (45). நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் குடும்பத்தினருடன் தங்கி, பொம்மை வியாபாரம் செய்து வந்தாா். எனினும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை பாலவாக்கத்துக்கு குடும்பத்தை மாற்றிவிட்டு, வேளாங்கண்ணியில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வந்தாராம். பொம்மை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கும், கடலூரிலுள்ள தந்தையைப் பாா்ப்பதற்காகவும் குடும்பத்தினருடன் அண்மையில் கடலூா் வந்தாராம். அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பாலமுருகன் மேலும் மனவேதனைக்கு ஆளானதாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த அவா் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT