கடலூர்

சாலையில் தேங்கிய மழைநீா்

DIN

நெய்வேலி: பண்ருட்டி, காந்தி நகரில் சாலையில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இதையடுத்து நகராட்சி ஊழியா்கள் மழை நீரை வியாழக்கிழமை வெளியேற்றினா்.

பண்ருட்டி நகராட்சியில் 27-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காந்தி நகா் பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். தொடா் மழையால் இந்தப் பகுதியில் பிரதான சாலையில் தண்ணீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா். இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை நகராட்சி பொறியாளா் மகாராஜன், சுகாதார அலுவலா் டி.சக்திவேல் ஆகியோரது மேற்பாா்வையில் மின்மோட்டாா் மூலம் மழைநீரை நகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT