கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆவணப்படம் வெளியீடு

DIN


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறை சார்பில், யாழ் நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது  தமிழிசைப் பணியை விளக்கும் ஆவணப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.  
 நிகழ்ச்சியில், பேராசிரியர் நா.கிரிஷ்குமார் வரவேற்றார். இசைத் துறைத் தலைவர் ஆர்.கே. குமார் முன்னிலை வகித்துப் பேசினார். பேராசிரியர் தி.அருள்செல்வி அறிமுக உரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தின் ஒளிவட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் வெளியிட (படம்), பதிவாளர் என். கிருஷ்ணமோகன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு ஆவணப்படத்தின் இயக்குநரை வாழ்த்தினார். நுண்கலைப் புல முதன்மையர் க.முத்துராமன் வாழ்த்துரை வழங்கினார். 
 விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தின் இயக்குநர் மு.இளங்கோவன் தனது  அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.  பேராசிரியர் தி. பாலச்சந்தர் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியை இசைத் துறைப் பேராசிரியர்கள் நா. கிரீஷ்குமார், தி.பாலச்சந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT