கடலூர்

கலங்கரை விளக்கம் தினம் கடைப்பிடிப்பு

பரங்கிப்பேட்டையில் கலங்கரை விளக்கம் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN


பரங்கிப்பேட்டையில் கலங்கரை விளக்கம் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்தக் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டதன் 92-ஆவது கலங்கரை விளக்கம் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, கடலோடல் முதுநிலை அலுவலர் வி.மதனகோபால் தலைமை வகித்து துறை சார்ந்த கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கலங்கரை விளக்கத்தின் தேவை, அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பலன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயலர் அலுவலர் திருஞானசம்பந்தம், பிஎஸ்என்எல் கோட்ட பொறியாளர் இ.எஸ்.கீதா, பேரூராட்சி பொறியாளர் ஏ.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று குத்துவிளக்கேற்றினர். இந்த நிகழ்வையொட்டி, பொதுமக்கள் இலவசமாக கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT