கடலூர்

பன்றிகள் தொல்லை அதிகரிப்பு

DIN

பண்ருட்டி நகரப் பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
பண்ருட்டி நகரில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், நகரில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. 
குறிப்பாக, மேலப்பாளையம், போலீஸ் லைன், லட்சுமிபதி நகர், கடலூர் சாலை, திருவதிகை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT